×
Saravana Stores

கூவத்தூர் – பவுஞ்சூர் சாலையில் வாகன சோதனை; விதிமுறைகளை மீறினால் அபராதம்: டிரைவர்களுக்கு தாசில்தார் எச்சரிக்கை

செய்யூர்: பவுஞ்சூர் – கூவத்தூர் நெடுஞ்சாலையில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மண் ஏற்றி செல்வதாக வந்த புகாரையடுத்து, செய்யூர் தாசில்தார் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, விதிமுறைகளை மீறினால் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஓட்டுநர்களை எச்சரித்து அனுப்பினார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கிழக்கு கடற்கரை சாலை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.

இதில், கூவத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணிக்காக செய்யூர் வட்டம் பவுஞ்சூர் அடுத்த இரண்யசித்தி கிராம பகுதியில் உள்ள ஏரியில் இருந்து அதிகப்படியான கனரக வாகனங்கள் ஈசிஆர் சாலை பணிக்காக மண் எடுத்து செல்கின்றன.இவ்வாறு செல்லும் கனரக லாரிகளின் ஓட்டுநர்கள், 30 டன்னுக்கு குறைவாக மண் ஏற்றி செல்ல வேண்டும். ஆனால், விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மண்ணை லாரியில் ஓட்டுநர்கள் கொண்டு செல்கின்றனர். இதனால், லாரிகளில் கொண்டு செல்லும் மண் சாலையில் சிதறுகின்றன. இதன் காரணமாக மற்ற வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

தொடர்ந்து, கூவத்தூர் சாலையில் அதிக அளவில் லாரிகள் சென்று வருவதால் இந்த சாலை எப்பொழுதும் மண் புழுதியுடன் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்து, முககவசம் அணிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

மேலும், இந்த ஏரியிலிருந்து அள்ளப்படும் மண் ஈசிஆர் சாலைக்கு மட்டும் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், தனிநபர்களுக்கும் இந்த மண் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. முறையான ஆவணங்களும் இல்லாமல் பல லாரிகள் செயல்படுகிறது. அதிவேகம், தார்ப்பாய் போடாதது உள்ளிட்ட அத்துமீறல்களிலும் ஈடுபடுகின்றனர். இது குறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், தாசில்தார் சரவணன் பவுஞ்சூர் கூவத்தூர் செல்லும் சாலையில் செல்லும் 12 கனரக வாகனங்களை ஆய்வு செய்து லாரி ஓட்டுநர்களிடம் தார்ப்பாய் கண்டிப்பாக போட்டுச் செல்ல வேண்டும். அதிவேகம் செல்லக்கூடாது, சாலை தடுப்புகள் அமைக்கப்பட்ட இடத்தில் கவனமாக செல்ல வேண்டும். மீண்டும் வீதிமுறைகளை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

The post கூவத்தூர் – பவுஞ்சூர் சாலையில் வாகன சோதனை; விதிமுறைகளை மீறினால் அபராதம்: டிரைவர்களுக்கு தாசில்தார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Couvatur – ,Pounjoor road ,Tahsildar ,Seyyur ,Seyyur tahsildar ,Pounjoor – ,Couvathur highway ,Chengalpattu… ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் அருகே வண்டி பாதை ஆக்கிரமிப்பு கண்டித்து திடீர் சாலை மறியல்