×

விபத்தில் உயிரிழக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்

 

பவானி, ஆக. 27: தமிழ்நாடு எலக்ட்ரி சிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேசன் கோபி மின் பகிர்மான வட்ட கிளையின் விரிவடைந்த செயற்குழு கூட்டம் பவானி அருகே உள்ள லட்சுமி நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, திட்டத் தலைவர் கிருஷ்ண மோகன்ராஜ் தலைமை தாங்கினார். மகளிர் அணி செயலாளர் நித்யா வரவேற்றார். மாநில துணைத் தலைவர் மணி செயலாளர் அறிக்கை வாசித்தார். மாநில செயல் தலைவர் ஜெயராமன், மாநில இணைச்செயலாளர் சேகர் சிறப்புரையாற்றினர்.

திட்டப் பொருளாளர் சந்திரன், துணைச்செயலாளர் முனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மின் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தேர்வு செய்யப்பட்டுள்ள 5 ஆயிரம் கேங்மேன்களை உடனடியாக பணி அமர்த்த வேண்டும். விபத்தில் உயிரிழக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கு நிவாரண நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறும் வரை இடைக்கால நிவாரணம் மாதம் ரூ.5 ஆயிரம் கூடுதலாக வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post விபத்தில் உயிரிழக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Bhavani ,Tamil Nadu Electricity City Board Employees Federation ,Gobi ,Paharmana ,Vatta Branch ,Lakshmi Nagar ,Bhawani ,Krishna Mohanraj ,
× RELATED ஈரோடு-பவானி-மேட்டூர் தேசிய...