×

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு..!!

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ரவீந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக ஆட்சியின்போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதிமுக முன்னாள் பிரமுகர் விஜய நல்லதம்பி புகாரின்பேரில் 2021-ல் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதியப்பட்டது. வழக்கில் 3 ஆண்டுகளாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

The post முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,minister ,Rajendra Balaji ,CHENNAI ,Chennai High Court ,Ravindran ,Court ,AIADMK ,Aavin ,Dinakaran ,
× RELATED சார்-பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு