- திருப்புத்தூர்
- முத்தையா
- ஆத்தங்கரைப்பட்டி கிராமம்
- திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம்
- லட்சுமி
- நாகப்பா மாருதப்பா அரசு பெண்கள் உயர் செகண்டரி பள்ளி
திருப்புத்தூர் : சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. கூலித் தொழிலாளி. இவரது மூத்த மகள் லட்சுமி (20) திருப்புத்தூர் நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து, 600க்கு 509 மதிப்பெண் பெற்றார். 2022ம் ஆண்டு வீட்டிலிருந்து நீட் தேர்வு எழுதினார். இதில் தேர்ச்சி பெறவில்லை. தொடர்ந்து முயற்சியை கைவிடாத லட்சுமி, இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் 720க்கு 555 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழக அரசு வழங்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இவரை கிராமத்தினரும், குடும்பத்தினரும் பாராட்டி வருகின்றனர்.
மாணவி லட்சுமி கூறுகையில், ‘‘நான் பிளஸ் 2 முடித்தவுடன் மேல்படிப்பு தேவையில்லை என பெற்றோர் தெரிவித்தனர். ஆனால் நான் பெற்றோரிடம் அடம்பிடித்து மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நீட் தேர்வு எழுதினேன். முதலில் சிறு மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சி பெறவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து மீண்டும் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். மருத்துவம் படித்து கிராமத்தில் உள்ள ஏழைகளுக்கு மருத்துவம் செய்வேன்’’ என்றார்.
The post அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி கூலித் தொழிலாளியின் மகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ சீட் appeared first on Dinakaran.