×

செப்டம்பர் 1 முதல் 7ம் தேதி வரை ஒன்றிய அரசுக்கு எதிராக ஒரு வாரம் போராட்டம்: முத்தரசன் அறிவிப்பு

திருச்சி: வரும் செப்டம்பர் 1 முதல் 7ம் தேதி வரை ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மறியல் போராட்டங்கள் நடத்த உள்ளதாக முத்தரசன் அறிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகள், உடமைகள், தொழிலுக்கு பாதுகாப்பு இல்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பாஜ, இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க போகிறதா என்பதை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழக மீனவர் பிரச்னையில் ஒன்றிய அரசு உரிய தீர்வு காண வேண்டும். 1925 டிசம்பர் 26ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் தோற்றுவிக்கப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை தொடங்கவுள்ளோம். ஒன்றிய அரசு, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து விரைந்து நடத்த வேண்டும்.

நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்து வரும் செப்டம்பர் 1 முதல் 7ம் தேதி வரை ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மறியல் போராட்டங்கள் நடத்தவுள்ேளாம். வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இடம் பெறலாம் என்று அறிவித்ததன் மூலம் பாஜ தனது நிலையில் இருந்து இன்னும் மாறவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. வயநாடு சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். பாஜவின் கைப்பாவையாக எடப்பாடி பழனிசாமி இருந்தார்.

அப்போது தான் உதய் மின் திட்டம், குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. வகுப்பு வாதத்திற்கு எதிராக மதசார்பின்மையை பாதுகாக்க கூடிய, ஜனநாயகத்தை பாதுகாக்க கூடிய வகையிலும், மாநில உரிமைகளை பாதுகாக்க கூடிய வகையிலும் திமுக ஆட்சி நடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post செப்டம்பர் 1 முதல் 7ம் தேதி வரை ஒன்றிய அரசுக்கு எதிராக ஒரு வாரம் போராட்டம்: முத்தரசன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union ,Mutharasan ,Trichy ,EU government ,Secretary of State ,Mudharasan Trichchi ,Muttarasan ,
× RELATED அமித்ஷாவை வெளியேற்று தமிழகம்...