சென்னை: தென் மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்நிலையில், வங்கக் கடல் காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்த நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் நிலவியது. அதில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 101 டிகிரி வெயில் கொளுத்தியது.
தஞ்சாவூர், தூத்துக்குடி, மதுரை விமான நிலையம் 100 டிகிரி வெயில் நிலவியது. மேலும், சென்னை, கரூர், காரைக்கால், புதுச்சேரி, திருச்சி பகுதிகளில் 99 டிகிரி, பரங்கிப்பேட்டை 97 டிகிரி வெயில் நிலவியது. இதற்கிடையே, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்புள்ளதாகவும், அது அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் பகுதிக்கு நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post 4 மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் appeared first on Dinakaran.