×

களியக்காவிளை அருகே சோகம் பெண் போலீஸ் கழுத்து அறுத்து தற்கொலை

*மன அழுத்தம் காரணமா? போலீஸ் விசாரணை

நாகர்கோவில் : களியக்காவிளை அருகே பெண் போலீஸ் தனது வீட்டில் கழுத்து அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் வயன்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பர் ரெஸ்டின். இவரது மனைவி மினி (41).

இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். மினி, கடந்த 2003ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த மினி, கடந்த 14.3.2021 முதல் பணிக்கு வர வில்லை. அவர் ஆப்சென்ட் பட்டியலில் இருந்தார். பணிக்கு வராமல் இருந்ததற்கான தகவலும் முறையாக தெரிவிக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று (23ம்தேதி) காலை 7 மணியளவில், வயன்கரையில் உள்ள தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மினி இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் களியக்காவிளை போலீசார் சென்று, மினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மன நிலை பாதிக்கப்பட்டு மினி சிகிச்சை பெற்று வந்ததாகவும், இது தொடர்பாக மன அழுத்தத்தில் அவர் தனக்கு தானே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் , தடயவியல் நிபுணர்கள் சென்று விசாரணை நடத்தினர்.

மினி இறந்து கிடந்த அறையில் சோதனை செய்யப்பட்டது. அவர் தற்கொலைக்கு முன் ஏதாவது கடிதம் எழுதி வைத்து உள்ளாரா? செல்போனில் யாருக்காவது தகவல் கூறி உள்ளாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் போலீஸ் திடீர் தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post களியக்காவிளை அருகே சோகம் பெண் போலீஸ் கழுத்து அறுத்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kaliakavilai ,Nagercoil ,Wayankarai ,Kaliyakavilai ,Kumari district ,
× RELATED நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மேற்கூரை இல்லாத வாகன பார்க்கிங்