×
Saravana Stores

மேலசெங்கல்மேடு வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

 

ஜெயங்கொண்டம், ஆக.24: ஜெயங்கொண்டம் அருகே மேலசெங்கல்மேடு வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மேலசெங்கல்மேடு கிராமத்தில் உள்ள குறுக்கு ரோட்டில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது.இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து கோயில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு ஊர் கிராம மக்கள் முன்வந்து கோயில் திருப்பணிகளை செய்து முடித்தனர். கடந்த 22ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது.

அதனைத் தொடர்ந்து வாஸ்து சாந்தி முதல் கால பூஜை நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான கோயில் கும்பாபிஷேக விழா நேற்று காலை தொடங்கியது. முன்னதாக மங்கள வாத்தியத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோயில் விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜ கோகிலா, மற்றும் மீன்சுருட்டி ஜெயங்கொண்டம், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் வீரசோழபுரம் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர் கிராம பொதுமக்கள், விழா கமிட்டி குழுவினர் செய்திருந்தனர்.

The post மேலசெங்கல்மேடு வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Melesengalmedu Varasidhi Ganesha Temple Kumbabhishekam ,Jeyangondam ,Melesengalmedu ,Varasidhi Vinayagar Temple ,Kumbabhishekam ,Jayangkondam ,Swami ,Ariyalur district ,Melesengalmedu Varasidhi Vinayagar Temple ,
× RELATED ஜெயங்கொண்டம் செங்குந்தபுரத்தில் 4 வது...