×
Saravana Stores

ஊரக வளர்ச்சித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்

 

ராமநாதபுரம், ஆக.24: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக கிராம பஞ்சாயத்துகளை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளாக தரம் உயர்த்தும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். நூறுநாள் வேலை திட்டத்திற்கு தனி ஊழியர் கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு நிரந்தர ஊழியர் கட்டமைப்பை மாநில, மாவட்ட, யூனியன் அளவில் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, போகலூர், நயினார்கோயில், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, மண்டபம், ராமநாதபுரம் மற்றும் திருப்புல்லாணி ஆகிய 11 யூனியன்கள் உள்ளன. இதுபோன்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி முகமை, திட்ட இயக்குனர் அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகம், சத்துணவு பிரிவு உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை தொடர்பான அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு உதவிகளை பெற அலுவலகங்கள் வந்த பொதுமக்கள் அலுவலர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

The post ஊரக வளர்ச்சித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Tamil Nadu Rural Development Officers Association ,Dinakaran ,
× RELATED பரமக்குடி அருகே ரயில் பிரேக் ஷூ கழன்று வந்து தாக்கியதில் விவசாயி பலி