மண்டபம், ஆக. 24: மண்டபம் கடற்கரை பூங்கா அருகே அமைந்துள்ள பாம்பன் சாலை பாலத்தின் நுழைவுப்பகுதியில் இருபுறமும் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் கடற்கரை பூங்கா அருகே மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் நுழைவுப் பகுதியில் பாம்பன் சாலைப்பாலத்தின் நுழைவுப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைதூரத்திற்கு கடல் தொடங்கும்.
இந்த குறிப்பிட்ட பகுதியில் சாலை பாலத்தின் இருபுறமும் பாலத்தின் பாதுகாப்பிற்காக மணல் சரியாமல் இருப்பதற்கு பெரும் கருங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருங்கற்கள் இடைப்பட்ட பகுதியில் கருவேல மரங்கள், தேவையற்ற செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால், இந்த கற்கள் சேதமடைந்து சரிந்தால் பாலத்திற்கு சேதம் ஏற்படும். எனவே, அந்த பகுதிகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் அனைத்தையும் அகற்ற தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மண்டபம் பூங்கா அருகே சாலைப்பாலத்தில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.