×

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதனுக்கு ஜாமின் வழங்க பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனுக்கு ஜாமின் வழங்க பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டுவந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.24 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குனரும் பாஜக கூட்டணி கட்சி தலைவருமான தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் காவல் கேட்டு தாக்கல் செய்த மனு சென்னை சிறப்பு உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நிதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி மலர் வேலன்டீனா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேவநாதன் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அதில் மோசடி செய்யவில்லை என்றும் அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாகவும் வாதிடப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வைப்பீடுகள் தங்களுக்கு பணத்தை திருப்பி தரவில்லை என்றும் இந்த நிதி முறைகேடு தொடர்பாக காவல்துறை விசாரணை செய்யவேண்டும் என்பதால் ஜாமின் வழங்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி. பாபு இந்த வழக்கில் ஒரு நிறுவனம் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவர் தலைமறைவாக உள்ளார் என்றும் 800க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும் தினமும் புகார்கள் வந்துகொண்டே இருப்பதாகவும். விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமின் வழங்கக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அந்த வழக்கின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 29ம் தேதி பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

 

The post மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதனுக்கு ஜாமின் வழங்க பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Devanathan ,Chennai ,Maylapur ,Chennai Mailapur ,Mailapur ,Permenet Fund ,Mayilapur ,Mailapur Financial ,Dinakaran ,
× RELATED மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி...