×

ஆண்டாள் கோயில் திருமுக்குளத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் படர்ந்துள்ள பாசியை அகற்றும் பணிகள் நேற்று தொடங்கியது.திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் குளத்தை பொருத்தவரை பல ஆண்டுகளுக்கு பிறகு வடகிழக்கு பருவமழை காரணமாக முழுமையாக நிறைந்து உள்ளது. இதில், குளத்தின் ஒரு பகுதியில் பாசி படர்ந்து இருந்தது. அதனை அகற்ற ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்து அதன் அடிப்படையில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் ஏற்பாட்டின்படி எக்ஸ்னோரா அமைப்பின் சார்பில் நேற்று அதன் ஊழியர்கள் குளத்தில் படர்ந்திருந்த பாசிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குளத்தின் ஒரு பகுதி முழுவதும் அதிக அளவு பாசி படர்ந்திருப்பதால், இதன் பணி நிறைவடைய, மேலும் இரண்டு தினங்கள் ஆகும் என ஊழியர்கள் தெரிவித்தனர். …

The post ஆண்டாள் கோயில் திருமுக்குளத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Andal temple ,Tirumukkulam ,Tiruvilliputhur ,Tiruvilliputhur Andal ,Temple… ,Andal ,Temple ,Dinakaran ,
× RELATED வில்லிபுத்தூரில் நம்மாழ்வார் ஜெயந்தி விழா