×

இன்று தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

டெல்லி: இன்று தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் சந்திரயான்-3 விண்கலத்துடன் அனுப்பப்பட்டு இருந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மிக முக்கியமான மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.

சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டிய பிரதமர் மோடி, நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடத்தை ‘சிவசக்தி முனை’ என்று அழைக்கவும், இந்த நாளை (ஆகஸ்டு-23) தேசிய விண்வெளி தினமாக கொண்டாடவும் உத்தரவிட்டார். அந்த வகையில், இன்றைய தினம் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முதல் விண்வெளி தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள X தள பதிவில் கூறியதாவது; முதல் தேசிய விண்வெளி தினத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள்.

விண்வெளித் துறையில் நமது நாட்டின் சாதனைகளை மிகுந்த பெருமையுடன் நினைவுகூர்கிறோம். நமது விண்வெளித்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் பங்களிப்பைப் போற்றும் நாள். நமது அரசு விண்வெளித் துறை தொடர்பான தொடர்ச்சியான எதிர்கால முடிவுகளை எடுத்துள்ளது. மேலும், வரும் காலங்களில் நாம் இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்வோம். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post இன்று தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : National Space Day ,Narendra Modi ,Delhi ,Shri Narendra Modi ,Dinakaran ,
× RELATED விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி நாட்டு...