நத்தம் : நத்தம் அருகே, தனியார் பள்ளி பஸ் மீது டூவீலர் மோதிய விபத்தில் பெற்றோர், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உசிலம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (40), லாரி டிரைவர். மனைவி பஞ்சு (30). இவர்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன். முருகன், மனைவி பஞ்சு, மகன் தர் (6) ஆகியோருடன், திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை டூவீலரில் சென்றார்.
நத்தம் – மதுரை நான்கு வழிச்சாலையில் முடக்குச்சாலை என்ற பகுதியில் காலை 8.30 மணியளவில் வந்தபோது, ஒரு வளைவில் எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் மீது டூவீலர் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முருகன், பஞ்சு, தர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் மற்றும் டிரைவர் காயமின்றி தப்பினர்.
தகவலறிந்து வந்த நத்தம் போலீசார், இறந்த 3 பேரின் உடல்களை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஒரு குடும்பத்தில் தந்தை, தாய் மற்றும் தம்பி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post நத்தம் அருகே பஸ் – டூவீலர் மோதல் தம்பதி, மகன் பரிதாப பலி appeared first on Dinakaran.