×
Saravana Stores

அமெரிக்கர்களுக்கு பாடம் எடுத்த கமலா ஹாரிசின் பேத்திகள்: ஜனநாயகக் கட்சியின் சிகாகோ மாநாட்டில் அரங்கேறிய ருசிகர நிகழ்வு

சிகாகோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசின் பெயரை சரியாக உச்சரிப்பது எப்படி என்று அவரது பேத்திகள் மேடையில் அமெரிக்கர்கள் பலருக்கும் எடுத்து சொன்னது பலரையும் கவர்ந்தது. ஜனநாயகக் கட்சியின் 4 நாள் மாநாடு சிகாகோவில் நடைபெற்று வருகிறது.

மாநாட்டின் கடைசி நாளில் மேடைக்கு வந்த கமலா ஹாரிசின் பேத்தி உறவு முறை சிறுமிகளான அமாரா,லைலா ஆகியோர் கமலா என்ற பெயரை முதலில் கமா என்றும் பிறகு பாடலை பாடுவது போல லா என்றும் கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள். சிறுமிகளை பின்பற்றி மாநாட்டிற்கு வந்த 100 கணக்கான ஜனநாயக கட்சியினர் ஒன்றிணைந்த கமலா என்று முழங்கியது ஸ்வாரசியத்தை ஏற்படுத்தியது. துணை அதிபர் கமலா ஹாரிஸின் பெயரை சரியாக உச்சரிப்பது குறித்து அவரது பேத்தி உறவு முறை சிறுமிகள் ஜனநாயக கட்சியினருக்கு பாடம் எடுத்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

The post அமெரிக்கர்களுக்கு பாடம் எடுத்த கமலா ஹாரிசின் பேத்திகள்: ஜனநாயகக் கட்சியின் சிகாகோ மாநாட்டில் அரங்கேறிய ருசிகர நிகழ்வு appeared first on Dinakaran.

Tags : Kamala Harrison ,Chicago convention ,Democratic ,Party ,Chicago ,Americans ,Kamala Harris ,Democratic Party ,US presidential election ,Chicago convention of ,
× RELATED கடற்கரையில் நடக்க முடியாமல் தடுமாறும் ஜோ பைடன்: வீடியோ வைரல்