×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானை தயாரிப்பு பணி தீவிரம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களாக ஆர்.பொன்னாபுரம், முத்தூர், வடக்கிபாளையம், கோட்டூர், ஒடையக்குளம், தேவிபட்டிணம், சேத்துமடை, அம்பராம்பாளையம், சமத்தூர், அங்கலகுறிச்சி, பில்சின்னாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மண்பாண்ட தொழில் நடக்கிறது. சமையலுக்கு தேவையான பானை மட்டுமின்றி, நவராத்திரி கொழு பொம்மை, காத்திகையையொட்டி அகல் விளக்கு என முக்கிய விசேஷங்களின்போது மண்பாட்ட தொழில் பரபரப்பாக இருக்கும். வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் பலரும், மண் பானை தயாரிப்பில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பிருந்தே ஈடுபட்டனர். ஆனால், தென்மேற்கு பருவமழைக்கு பிறகு வடகிழக்கு பருவமழையும் தொடர்ந்து பெய்ததுடன், கோதவாடி குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பால், பானை தயாரிப்பதற்குண்டான உரிய களிமண்,  கிடைக்க பெறாமல் போனது. இதனால், மண்பாண்ட தொழில் மந்தமானதாக கூறப்படுகிறது. இந்த நிலை தற்போதும் நீடித்துள்ளதால், வரும் பொங்கல் பண்டிகைக்கான பானை தயாரிப்பு பணி மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கோதவாடி குளத்தில் இருந்து பல மாதத்திற்கு முன்பும், பிற இடங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட  மண்ணை கொண்டு, பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் தற்போது தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.பொங்கலுக்கு, இன்னும் சில வாரமே உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் குறைந்து பெரும்பாலான நேரம் பனிப்பொழிவு அதிகரிப்பால், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளை உரிய நேரத்தில் உலர வைக்க முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.இதனால், கடந்த ஆண்டைவிட இந்த  ஆண்டில் பண்பானை தயாரிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.  வெளி மாவட்டங்களிருந்து ஆர்டர்கள் மூலம் பொங்கல் பானை தயாரித்தாலும், பானைகள் உலர்வதற்கு நாட்கள் பல ஆவதாக தொழிலாளர்கள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து மண்பாட தொழிலாளர்கள்  கூறுகையில்,“பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, பொள்ளாச்சி சுற்று வட்டார கிராம பகுதி மட்டுமின்றி பல இடங்களில் இருந்து, பொங்கல் பானைக்காக ஆர்டர்கள் வரபெற்றுள்ளது. ஆனால், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், அதனை விரைந்து உலர வைக்க  முடியாத நிலை ஏற்படுகிறது. இருப்பினும், பொங்கல் பண்டிகைக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், சிறியது முதல் பெரிய அளவிலான பானை தயாரிப்பு பணி மும்முரமாக நடக்கிறது. பொங்கல் பானை ரூ.80 முதல் ரூ.200வரை என தரத்திற்கேற்ப ஆர்டர் மூலம் விற்பனை செய்யப்படுகிறது’’ என்றனர்….

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானை தயாரிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Pollachi ,R. Ponnapuram ,Muttur ,Vadakipalayam ,Kottur ,Odayakulam ,Devipattinam ,Sethumadai ,Ambarampalayam ,Samathur ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...