×
Saravana Stores

ஊரக வளர்ச்சி துறையினரின் தற்செயல் விடுப்பு போராட்டம்

 

திருவாரூர், ஆக. 23:திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஊரக வளர்ச்சி துறையினரின் தற்செயல் விடுப்பு போராட்டம் காரணமாக அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் இருந்து வரும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், மாதத்தின் கடைசி நாளில் ஊதியம் வழங்கிட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணைகளை வெளியிட வேண்டும் மற்றும் அவர்களுக்கு உடனடியாக உயர்த்தப்பட்ட விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்திட வேண்டும்,

தூய்மை பாரத இயக்க வட்டார, மாவட்ட,ஒருங்கிணைப்பாளர்கள் ஊதியத்தினை உயர்த்தி பணிவரன் முறை செய்திட வேண்டும், 100 நாள் வேலை திட்டம் மற்றும் கலைஞர் கனவு இல்ல வீடு கட்டும் திட்டம் போன்ற பணிகளுக்கு புதிய பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன்காரணமாக கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் இயங்கி வரும் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

The post ஊரக வளர்ச்சி துறையினரின் தற்செயல் விடுப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Rural Development Department ,Tiruvarur ,Tiruvarur district ,development department ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில்...