- தஞ்சை மருத்துவக் கல்லூரி
- தஞ்சாவூர்
- தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- மருத்துவக் கல்லூரி
- முதல்வர்
- டாக்டர்
- பாலாஜி நாதன்
- கண்காணிப்பாளரை
- ராமசாமி
- நிலைய மருத்துவர்
- செல்வம்
- ஆறுமுகம்
- துணை
- தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி
- தின மலர்
தஞ்சாவூர், ஆக. 23: தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் \”ராகிங் கொடுமை”க்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் ராமசாமி, நிலைய மருத்துவர் செல்வம், ஆறுமுகம், துணை முதல்வர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மருத்துவ மாணவ,மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ‘ராகிங்கிற்கு’ எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தியபடியும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதில், முதலாம் ஆண்டில் சேரும் புதிய மாணவர்களிடம் சீனியர் மாணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என போலீசார், பேராசிரியர்கள் பேசினர்.
The post தஞ்சை மருத்துவக் கல்லூரியில் ராகிங் கொடுமைக்கு எதிராக மாணவர்கள் appeared first on Dinakaran.