திண்டுக்கல், ஆக. 23: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊரக வளச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலகம் மற்றும் அனைத்து யூனியன் அலுவலகங்களும் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் ராஜசேகரன் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 750 பணியாளர்கள் உள்ளனர். அதில் 647 பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பணி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, என்றார்.
The post தற்செயல் விடுப்பு போராட்டம் appeared first on Dinakaran.