திசையன்விளை,ஆக.23: குமாரபுரம் ஊராட்சி மேலத்தெருவில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மூதாதையர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தை தனியார் கிரயத்தால் பயன்படுத்த முடியாமல் இருந்தது. எனவே அவர்கள் தங்களுக்கென்று தனியாக இடம் வாங்கி அதனை பயன்படுத்தி வந்தனர். 19 ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வைக்கப்பட்டுள்ள கல்லறை அருகில் தங்கள் உறவினர்களை அடக்கம் செய்ய முடியாமல் அவதியுற்றனர். இதனையறிந்த ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளருமான அனிதா பிரின்ஸ் ரூ.5 லட்சம் மதிப்பிலான 90 சென்ட் அளவுள்ள அந்த இடத்தை தனது சொந்த செலவில் கிரயம் பெற்றார். அதில் 40 சென்ட் இடத்தை இடுகாட்டிற்காகவும், மீதமுள்ள 50 சென்ட் இடத்தை பஞ்சாயத்து பயன்பாட்டிற்காகவும் தானமாக வழங்கினார். தங்கள் மூதாதையர்கள் வைத்த இடுகாட்டிலேயே தாங்களும் பயன்படுத்த ஏற்பாடு செய்த ஊராட்சி தலைவரை பொதுமக்கள் பாராட்டினர்.
The post குமாரபுரம் ஊராட்சி பகுதியில் ரூ.5 லட்சத்தில் சொந்த செலவில் இடுகாட்டிற்கு நிலம் வாங்கிய பஞ்சாயத்து தலைவர் தமிழக அரசிடம் ஒப்படைத்தார் appeared first on Dinakaran.