×
Saravana Stores

சத்துணவு மையங்களுக்கு முட்டை உரிக்க நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய திட்டம்: அரசிடம் அனுமதி கோரியது சமூகநலன்துறை

சென்னை: சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள், உதவியாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, அதிக பயனாளிகளை கொண்ட சத்துணவு மையங்களுக்கு முட்டை உரிப்பதற்கான நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய சமூகநலன் துறை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் 451 பள்ளி சத்துணவு மையங்களில் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ளனர். இந்த மையங்களை சேர்ந்த பணியாளர்கள் தினமும் 500 முட்டைகளுக்கு மேல் வேக வைத்து உரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில், மாணவர்களுக்கான முட்டைகள் உடைந்து வீணாகி விடுகின்றன. சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதன் காரணமாக, அதிக பயனாளிகளை கொண்ட 431 பள்ளி சத்துணவு மையங்களுக்கு நவீன முட்டை உரிக்கும் இயந்திரம் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, நிதி ஒதுக்கீடு செய்து இயந்திரம் கொள்முதல் செய்ய அனுமதி கோரி தமிழக அரசிடம் சமூக நலத்துறை சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. விரைவில், இதற்கான அனுமதி கிடைத்துவிடும். அதன்பிறகு, டெண்டர் விடப்பட்டு, முட்டை உரிக்கும் இயந்திரம் சத்துணவு மையங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

The post சத்துணவு மையங்களுக்கு முட்டை உரிக்க நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய திட்டம்: அரசிடம் அனுமதி கோரியது சமூகநலன்துறை appeared first on Dinakaran.

Tags : Social welfare ,CHENNAI ,social welfare department ,Tamil Nadu ,
× RELATED ஆட்சேர்ப்புக்கு இந்தி தகுதி என...