×
Saravana Stores

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள 27 ஏக்கரை அடையாளம் காண சிறப்பு குழு அமைக்க ஆணை

சென்னை: வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை என்பது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சர்வதேச தரப்பில் ரூ.99 கோடி செலவில் அமைக்கவுள்ள சர்வதேச வள்ளலார் மையத்துக்கு தேவையான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது வள்ளலார் சத்திய ஞான சபை அமைந்துள்ள 71 ஏக்கர் பரப்பளவு நிலம் வழிபாட்டு நிலம் என்பதால் அங்கு எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள கூடாது என மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கபட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் குற்றச்சாட்டுகளாக செல்ல வேண்டாம். அதில் உள்நோக்கம் உள்ளது. அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டியத் அரசின் கடமை என்று கூறினர். நாளை அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் அப்போது அரசின் மீது தான குறை கூறிவீர்கள் என தெரிவித்தனர்.

கோவிலுக்கு பக்தர்கள் 106 ஏக்கர் நிலம் தானமாக குடுத்துள்ள நிலையில், அரசுதரப்பில் 71 ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாக கூறியது பற்றி கேள்வியெழுப்பினர். அப்போது இந்து அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் கடந்த 1938-ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை இந்த கோவிலை கட்டுப்பட்டில் எடுத்தபோது 71 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்ததாக குறிப்பிட்டார். 6.5 ஏக்கர் நிலத்தை ஆகிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி 27 ஏக்கர் நிலம் ஆகிரமிப்பில் உள்ளதாகவும் சுட்டிகாட்டினார். ஆகிரமிப்பாளர்களின் தூண்டுதலால் தான் வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு தொடர்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பில் உள்ள சத்திய ஞான சபைக்கு சொந்தமான 27 ஏக்கர் நிலத்தை அடையாளம்கான இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து 1 மாதத்திற்குள் அடையாளம்கான வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் சத்திய ஞான சபை மீது அக்கறை உள்ளவர்கள் ஆகிரமிப்பாளர்கள் குறித்த பட்டியலை தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

இந்த வழ்க்கின் விசாரணை செப்.5-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள 27 ஏக்கரை அடையாளம் காண சிறப்பு குழு அமைக்க ஆணை appeared first on Dinakaran.

Tags : Vadalur Vallalar Sathya ,Jana Sabha ,Chennai ,Vallalar International Centre ,Chennai High Court ,Suresh Kumar ,Sounder ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது