×
Saravana Stores

கூத்தூரில் கால்நடை பராமரிப்பு சிகிச்சை முகாம்

 

பாடாலூர், ஆக. 22: கால்நடை பராமரிப்பு சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கூத்தூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு சிகிச்சை நேற்று நடந்தது. இதில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசுக்கு செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், தாது உப்பு கலவை வழங்குதல், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் உள்ளிட்டவை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பயன் பெற்றன. மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் தேசிய வேளாண் நிறுவனத்தின் வேளாண் வல்லுநர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முகாமிற்கு கால்நடை உதவி மருத்துவர்கள் செல்வகுமார், இளையராஜா, ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

 

The post கூத்தூரில் கால்நடை பராமரிப்பு சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Animal Care Treatment Camp ,Koothoor ,Padalur ,Livestock ,Koothur ,Aladhur taluka ,Perambalur district ,
× RELATED பெரம்பலூர் அருகே வேப்ப மரத்தில் பால் வடியும் அதிசயம் பொதுமக்கள் வழிபாடு