×

ரிப்பப்பரி –திரை விமர்சனம்

கோயமுத்தூர் தலைக்கரை கிராமத்தில், சாதி மாறி காதல் திருமணம் செய்யும் ஆண்களை வரிசையாக கொல்கிறது ஒரு பேய். அதுபற்றி விசாரிக்கும் பொறுப்பேற்ற ஒரு இன்ஸ்பெக்டர், மாஸ்டர் மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் நோபிள் ஜேம்ஸ், மாரி ஆகியோரை தலைக்கரைக்கு அனுப்புகிறார். அங்குள்ள ஆர்த்தி பொடியை மாஸ்டர் மகேந்திரன் காதலிக்க, இந்த விஷயம் பேயாகி விட்ட ஆர்த்தி பொடியின் அண்ணன் னிக்கு தெரிகிறது. உடனே மாஸ்டர் மகேந்திரனைக் கொல்ல பேய் முயற்சிக்க, இறுதியில் என்ன நடக்கிறது? பேய்க்கு எப்படி சாதி வெறி ஏற்பட்டது என்பது மீதி கதை.

கிராமத்து இளைஞனாக வரும் மாஸ்டர் மகேந்திரன், நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளை ரசிக்கலாம். ஆர்த்தி பொடிக்கும், அவருக்குமான காதல் இயல்பாக இருக்கிறது. ஆர்த்தி பொடி அழகிலும், னியின் காதலி காவ்யா அறிவுமணி நடிப்பிலும் ஸ்கோர் செய்கின்றனர். ஆர்த்தி பொடியை ஒருதலையாக காதலிக்கும் இளைஞர், அடிக்கடி ஜான் விஜய்யை ஞாபகப்படுத்துகிறார். தம்பி மாதிரி பார்த்துக்கொண்டவன் செய்த துரோகத்தால் காதலியை இழந்து பேயாக மாறிய னி, நடிப்பில் கவனிக்க வைக்கிறார். தளபதி ரத்னத்தின் கேமரா, கிராமத்தின் பசுமையை குளுகுளுவென்று பதிவு செய்துள்ளது. திவாகரா தியாகராஜனின் இசை பரவாயில்லை ரகம். பிளாஷ்பேக்கிற்குள் பிளாஷ்பேக் வைத்ததை இயக்குனர் நா.அருண் கார்த்திக் தவிர்த்திருக்கலாம்.

The post ரிப்பப்பரி – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Coimbatore ,Thalaikarai ,Master Mahendran ,Noble James ,Mari ,Ripperberry ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு