- 253வது நினைவு தினம்
- அரசு
- ஒண்டிவீரன்
- ஸ்தூபி
- சிவகிரி
- அமைச்சர்
- KKSSR ராமச்சந்திரன்
- தென்காசி
- கலெக்டர்
- கமல் கிஷோர்
- ராணி ஸ்ரீகுமார்
- ஸ்டூபி
- பச்சேரி கிராமம்
- வாசுதேவநல்லூர்
சிவகிரி : சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 253வது நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி வாசுதேவநல்லூர் அருகே பச்சேரி கிராமத்தில் உள்ள ஒண்டிவீரன் ஸ்தூபிக்கு அரசு சார்பில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தென்காசி கலெக்டர் கமல் கிஷோர், எம்பி ராணிஸ்ரீகுமார், எம்எல்ஏக்கள் ராஜா, சதன் திருமலைக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சங்கரன்கோவில் ஆர்டிஓ கவிதா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், செயற்குழு உறுப்பினர்கள் சவுக்கை சீனிவாசன், பரமகுரு, யூனியன் சேர்மன்கள் பொன் முத்தையாப் பாண்டியன், லாலா என்ற சங்கரபாண்டியன், திமுக மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், மாவட்ட பொருளாளர் சரவணன், மாநில மருத்துவரணி துணைச்செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, கடற்கரை, சேர்மத்துரை, கிறிஸ்டோபர், ராமச்சந்திரன், வெள்ளத்துரை, அன்பழகன், பால்ராஜ், நகர செயலாளர்கள் அந்தோணிசாமி,
பிரகாஷ், சிவகிரி தாசில்தார் ரவிக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மைதீன் பட்டாணி, குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் ராணி, தேர்தல் பிரிவு தாசில்தார் ரவிகணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, மல்லிகா, யூனியன் பொறியாளர்கள் அருள் நாராயணன், ஹவ்வாஷகிரா, யூனியன் துணைத்தலைவர் சந்திரமோகன், ஆர்ஐ கோபாலகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் மதி மாரிமுத்து, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சையா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், சார்பு அணி துணை அமைப்பாளர்கள் முத்துக்குமார், மாடசாமி, சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜலால் மற்றும் வீரமணி, வெங்கடேஷ், ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் லில்லிபுஷ்பம், விமலா, ஊராட்சி தலைவர் பாண்டிராஜா உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணாமுரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ தலைமையில் சந்திரசேகரன், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை மாரியப்பன், இணைச்செயலாளர் சண்முகபிரியா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணைச்செயலாளர் சிவஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் துரைப்பாண்டியன், செல்லப்பன், வசந்தம் முத்துபாண்டி,
ஒன்றிய துணைச்செயலாளர் பொன்முத்து வேல்சாமி, பேரூர் செயலாளர்கள் முனியராஜ், மாடசாமி, பெரியதுரை, நீராவி, தீக்கனல் லட்சுமணன், மகாராஜன், சசிகுமார் உள்பட பலர் அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.காங்கிரஸ் சார்பில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கை கணேசன், நாகராஜ், மாவட்ட விவசாய அணி மணிகண்டன், ஆறுமுகம் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தியாகிகளை கவுரவிப்பதில் முதல்வர் தனிக்கவனம்
பின்னர் அமைச்சர் கூறியதாவது, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் தமிழக அரசு கவுரவித்து வருகிறது. தியாகிகளை கவுரவிக்க வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். பூலித்தேவனின் படைத்தளபதியான ஒண்டிவீரனின் நினைவு நாளில் அவரை கவுரவிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில் இங்கு வந்துள்ளோம். உயிரை துச்சமென மதித்து போராடியவர் ஒண்டிவீரன் என்றார்.
The post 253வது நினைவு தினத்தை முன்னிட்டு ஒண்டிவீரன் ஸ்தூபிக்கு அரசு சார்பில் மரியாதை appeared first on Dinakaran.