×
Saravana Stores

திருவாரூர் மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை

 

திருவாரூர், ஆக. 21: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் மற்றும் ராஜேஷ் ஆகிய 2 இளம் விளையாட்டு வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பிய நிலையில் இவர்களுக்கான பாராட்டு விழாவானது நேற்று திருவாரூர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் நடை பெற்றது. இதில் வீரர்களை பாராட்டி கலெக்டர் சாரு  பேசியதாவது,திருவாரூர் மாவட்ட த்தை சேர்ந்த 2 இளம் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்று வந்துள்ளனர்.

இவர்களை போன்று அனைவரும் முழு முயற்சியுடன் செயல்ப ட்டு, பல்வேறு சாதனைக ளை புரிய உத்வேகத்துடன் செயல்படவேண்டும். படிப்பு எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு விளையாட்டிற்கும் முக்கிய த்துவம் அளிக்க வேண்டும்.மாணவ பருவத்திலேயே உங்களுக்கு விருப்பமான விளையாட்டில் தனி த்துவம் பெற்று தேசிய, மாநில அளவில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். இப்பருவத்தில் ஒழுக்கத்துடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும். இதற்காக தமிழகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஒவ்வொரு ஊரிலும் அனைத்து தரப்பினரும் விளையாடுவதற்கு ஏதுவாக சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைத்து தர அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான விளையாட்டு மைதானங்கள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்திலுள்ள இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு சாதனைகள் புரிந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,Tiruvarur ,Praveen ,Rajesh ,Paris Olympics ,Dr. ,Kalaignar ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில்...