×

11 மொழிகளில் ‘ஹனு-மேன்’

ஐதராபாத்: பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா ஹீரோவாக நடித்திருக்கும் படம், ‘ஹனு-மேன்’. முக்கியமான வேடங் களில் விநய் ராய், வரலட்சுமி, அமிர்தா அய்யர், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி நடித்துள்ளனர். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். கவுரஹரி, அனுப் தேவ், கிருஷ்ணா சவுரப் ஆகியோர் இசை அமைத்துள்ளனர். குஷால் ரெட்டி இணைந்து தயாரிக்கிறார். மதி சைதன்யா வழங்கும் பிரைம் ஷோ என்டர் டெயின்மென்ட் சார்பில் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார்.

இப்படத்தின் ஹீரோ அனுமனின் சக்திகளைப் பெற்று, அஞ்சனாத்திரிக்காக எவ்வாறு போராடுகிறார் என்பது கதை. இந்தியா முழுவதும் 130 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி, கன்னடம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனா, ஜப்பான் ஆகிய 11 மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது. ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை.

The post 11 மொழிகளில் ‘ஹனு-மேன்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hyderabad ,Prashant Verma ,Teja Sajja ,Vinay Roy ,Varalakshmi ,Amrita Iyer ,Ketap Seenu ,Sathya ,Raj Deepak Shetty ,Sivendra ,Gaurahari ,Anup ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டில் கைது...