- காங்கிரஸின் அமைதி பேரணி
- குலித்துறை
- மார்த்தாண்டம்
- காங்கிரஸ்
- ராஜீவ் காந்தி
- தாரகாய் குத்பர்ட்
- சட்டமன்ற உறுப்பினர்
- குளித்துரா தபால் நிலையம்
- குளித்தூரில் காங்கிரஸ் அமைதி பேரணி
- தின மலர்
மார்த்தாண்டம், ஆக. 21: ராஜீவ் காந்தி 81 வது பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் அமைதி பேரணி நடை பெற்றது. குழித்துறை சந்திப்பில் தொடங்கிய அமைதி பேரணிக்கு தாரகை கத்பர்ட் எம்எல்ஏ தலைமை வகித்தார். பேரணியானது குழித்துறை தபால் நிலைய சந்திப்பு, தாலுகா அவலக சந்திப்பு வழியாக கழுவன் திட்டை சந்திப்பை சென்றடைந்தது. கழுவன்திட்டையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு தாரகை கத்பர்ட் தலைமையில் காங்கிரசார் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தீவிரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். மேலும் பொதுமக்களுககு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அருள்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாநில பொதுச் செயலாளர்கள் பால்ராஜ், ஆஸ்கர் பிரடி, வழக்கறிஞர்கள் டான் பெரின், அருந்தாஸ், சாலின், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திபாகர், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், வட்டார தலைவர் ரவிசங்கர், விளவங்கோடு ஊராட்சி தலைவி லைலா ரவிசங்கர் நிர்வாகிகள், ஜவகர் பால் மஞ்ச் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், ஜோசப் தயாசிங், பாபு, கவுன்சிலர் ரோஸ் லெட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post குழித்துறையில் காங்கிரசார் அமைதி பேரணி appeared first on Dinakaran.