×

மாநிலங்களவை இடைத்தேர்தல் ஒன்றிய அமைச்சர்களுக்கு பா.ஜவில் வாய்ப்பு

புதுடெல்லி: மாநிலங்களவை இடைத்தேர்தலில்ஒன்றிய அமைச்சர்கள் ரவ்னீத்சிங் பிட்டு, ஜார்ஜ் குரியன் ஆகியோருக்கு பாஜ வாய்ப்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 12 மாநிலங்களவை எம்பி பதவிகள் காலியாக உள்ளன. இங்கு செப்.3ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதை தொடர்ந்து பா.ஜ நேற்று 9 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

ராஜஸ்தானில் இருந்து ஒன்றிய அமைச்சர் ரவ்னீத்சிங் பிட்டு, மத்தியபிரதேசத்தில் இருந்து ஜார்ஜ் குரியன், ஒடிசாவில் இருந்து பிஜூஜனதா தளம் முன்னாள் தலைவர் மம்தா மொகந்தா,அரியானாவில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிரண் சவுத்ரி ஆகியோர் பாஜ சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பீகாரில் மனன் குமார் மிஸ்ராவும், மகாராஷ்டிராவில் இருந்து தைரியஷில் பாட்டீலும், திரிபுராவில் ராஜீப் பட்டாச்சார்ஜியும் போட்டியிடுகிறார்கள். அசாமில் மிஷன் ரஞ்சன் தாஸ், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராமேஸ்வர் டெலி ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

The post மாநிலங்களவை இடைத்தேர்தல் ஒன்றிய அமைச்சர்களுக்கு பா.ஜவில் வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Rajya Sabha ,New Delhi ,BJP ,Ravneetsingh Bittu ,George Gurion ,Election Commission ,Union ,
× RELATED மக்களவை நிலைக்குழு தலைவர் பதவி...