- பௌர்ணமி கிரிவலம்
- சஞ்சீவிராயர் கோயில்
- Badalur
- பூமாலை சஞ்சீவிராயர் மலைக்கோயில்
- பாடாலூர்,
- ஆலத்தூர் தாலுக்கா
- பௌர்ணமி கிரிவலம்
- பாடாலூர், ஆலத்தூர் தாலுக்கா
- பெரம்பலூர் மாவட்டம்
பாடாலூர், ஆக.20: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலைக் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் உள்ள பூ மலை சஞ்சீவிராயர் மலைக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கிரிவல விழாநடைபெறுவது வழக்கம். அதேபோல் ஆவணி மாத பவுர்ணமி கிரிவல விழா நேற்று நடைபெற்றது.
முன்னதாக மாலை 5 மணிக்கு மலையின் அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள், தேங்காய் பூ பழங்களுடன் மலையை சுற்றி ‘கோவிந்தா கோவிந்தா’ என்று பக்தி பரவசத்துடன் மலையைச்சுற்றி கிரிவலம் வந்தனர்.
பின்னர் வழித்துணை ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு பால், பன்னீர், மஞ்சள், புஷ்பம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கிரிவலவிழா மற்றும் சிறப்பு அபிஷேகத்தில் பாடாலூர், திருவிளக்குறிச்சி, தெரணி, காரை, விஜயகோலபுரம், புதுக்குறிச்சி, நாரணமங்கலம், மருதடி, இரூர், சீதேவிமங்கலம், கூத்தனூர், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post சஞ்சீவிராயர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் appeared first on Dinakaran.