×

விபத்தில் மூளைச்சாவு பம்பை வாசிப்பவரின் உறுப்புகள் தானம்

கலசபாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த மதுரா நவாப்பாளையத்தை சேர்ந்தவர் வேலு(45), பம்பை வாசிப்பவர். விவசாயமும் செய்து வந்தார். இவரது மனைவி சித்ரா (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 16ம் தேதி செங்கம் புதூர் மாரியம்மன் கோயிலில் பம்பை வாசிப்பதற்காக வேலு லாரியில் சென்றார். புதுப்பாளையம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் படுகாயத்துடன் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வேலுவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இதையடுத்து குடும்பத்தினர் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. வேலுவின் இதயம், நுரையீரல் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல் சிஎம்சி ராணிப்பேட்டை மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சென்னை வேலா மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் காவேரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் வேலுவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

The post விபத்தில் மூளைச்சாவு பம்பை வாசிப்பவரின் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : Kalasapakkam ,Mathura Navappalayam, Thiruvannamalai district ,Chitra ,Sengam Pudoor Mariamman ,
× RELATED பர்வதமலை மீது ஏற புதிய கட்டுப்பாடு ஜன.1 முதல் அமல்