×
Saravana Stores

வேளாங்கண்ணி மாதா தேவாலயத்திற்கு மதுராந்தகம் வழியாக பாதயாத்திரை

மதுராந்தகம்: வேளாங்கண்ணி மாதா தேவாலயத்திற்கு மதுராந்தகம் வழியாக பாத யாத்திரையாக பக்தர்கள் செல்கின்றனர்.  தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி தேவாலயம் நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க புனித யாத்திரை தேவாலயங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் வேளாங்கண்ணி திருவிழா, செப்டம்பர் 8ம் தேதி தேர்த் திருவிழாவுடன் முடிவடைகிறது.

இந்த திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் சென்னை, கொச்சி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருந்து பக்தர்கள் காவிஉடை அணிந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு செங்கல்பட்டு, மதுராந்தகம், சித்தாமூர், சூனாம்பேடு, மரக்காணம், பாண்டிச்சேரி வழியாக நடந்து செல்கின்றனர்.

இந்த ஆண்டு வேளாங்கண்ணியில் நடைபெறும் திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் நேற்று முதல் மாதாவின் கொடியை கையில் ஏந்திய படி, சிறிய சப்பரத்தில் மாதாவை அலங்கரித்து ஊர்வலமாக மதுராந்தகம் பகுதியை கடந்து சென்றனர். இதுபோன்று நடந்து செல்லும் பக்தர்களுக்காக மதுராந்தகம் பகுதியில் உள்ள மக்கள் தண்ணீர் உணவு ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

The post வேளாங்கண்ணி மாதா தேவாலயத்திற்கு மதுராந்தகம் வழியாக பாதயாத்திரை appeared first on Dinakaran.

Tags : Velankanni Mata Church ,Madhurandakam ,Maduraandakam ,Nagapattinam ,Tamil Nadu ,Velankanni Church ,
× RELATED மதுராந்தகம் நகராட்சியில்...