×

ஜெயப்பிரியா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் சோதனை.! ரூ.250 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

சென்னை: நெய்வேலியை தலைமையிடமாக கொண்ட ஜெயப்பிரியா நிதிநிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் நடந்த அதிரடி சோதனையில் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சோதனையில் ரூ.12 கோடி ரொக்கம் பணம், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம் நெய்வேலியை தலைமையிடமாக கொண்டு ஜெய்பிரியா நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளது. ஜெயப்பிரியா நிதி நிறுவனத்திற்கு ஜெய்சங்கர் என்பவர் உரிமையாளராக உள்ளார். இவர் தேமுதிகவில் நிர்வாகியாக இருப்பதாக கூறப்படுகிறது. தொழிலதிபர் ஜெய்சங்கர், நிதிநிறுவனம், ரியல் எஸ்டேஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். அதன்படி ஜெயப்பிரியா நிதிநிறுவனம் கடந்த ஆண்டு வருமான வரித்துறையில் தாக்கல் செய்த கணக்கில் ஒன்றிய அரசுக்கு பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து கடந்த 16ம் தேதி ஜெயப்பிரியா நிதிநிறுவனத்திற்கு சொந்தமான கடலூர், நெய்வேலி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.12 கோடி ரொக்க பணம் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 30 இடங்களில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கணக்காய்வு செய்தனர். தற்போது, ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஐடி அதிகாரிகள் ஜெயப்பிரியா நிதி நிறுவனத்தின் உரிமையாளர் ஜெய்சங்கர் மற்றும் நிதி நிறுவன மேலாளர்களுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது….

The post ஜெயப்பிரியா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் சோதனை.! ரூ.250 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Jayapriya Finance Company ,Chennai ,Neyveli ,Dinakaran ,
× RELATED மந்த நிலையில் நடந்து வரும் சாலை...