×

அமிதாப் பச்சனுக்கு மீண்டும் புளூ டிக்

புனே: டிவிட்டர் தளத்தில் அரசியல் தலைவர்கள், திரையுலகினர் தங்கள் அதிகாரப் பூர்வ கணக்கில் புளூ டிக் பயன்படுத்தினர். இந்த புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதந்தோறும் சந்தா தொகை வசூலிக்க டிவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்திய பயனாளர்கள் ஒரு மாதத்துக்கு ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணையலாம். அதன்படி கடந்த 20ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டிவிட்டர் கணக்கின் புளூ டிக் அகற்றப்
படும் என்று டிவிட்டர் நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்தார். இதையடுத்து சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் போன்றோரின் கணக்கில் புளூ டிக்கை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. அவர்
களில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் ஒருவர்.

இந்நிலையில், தற்போது அமிதாப் பச்ச னின் புளூ டிக் மீண்டும் கிடைத்துள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் எலான் மஸ்க்கை ‘சகோதரரே’ என்று குறிப்பிட்டு, ‘உங்களுக்கு எனது நன்றி. எனது பெயருக்கு முன்பு நீலத்தாமரை (புளூ டிக்) சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு நான் என்ன சொல்வது சகோதரரே? ஒரு பாட்டு பாட வேண்டும் என்றுதான் தோன்றுகிறது’ என்று தெரிவித்துள்ளார். தனக்கு புளூ டிக் நீக்கப்பட்டதும், அதை மீண்டும் தர வேண் டும் என்று அமிதாப் பச்சன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த சேவைக்காக ஏற்கனவே பணம் செலுத்தியதாகவும் அவர் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் புளூ டிக் கிடைத்துள்ளது.

The post அமிதாப் பச்சனுக்கு மீண்டும் புளூ டிக் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Amitabh Bachchan ,Pune ,Twitter ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கலைஞர் 100 விழாவில் பங்கேற்க அமிதாப் பச்சனுக்கு அழைப்பு..!!