நெல்லை: நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே கீழப்பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் தங்கராஜ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (28). இவர்களது மகள் இசக்கியம்மாள் (9). 4ம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள நீர்மேலழகியான் குளம் அண்மையில் பெய்த மழையால் நிரம்பியுள்ளது. பல இடங்களில் மண் எடுத்து பள்ளமாக இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை குளத்துக்கு சென்று சாந்தி துணிகளை துவைக்க, குளித்து கொண்டிருந்த இசக்கியம்மாள் ஆழமான இடத்தில் சிக்கி தத்தளித்தார். உடனே சாந்தி மகளை காப்பாற்ற குதித்துள்ளார். ஆனால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குளத்தில் மூழ்கிய 9 வயது மகளும் காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழப்பு appeared first on Dinakaran.