×
Saravana Stores

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளதா என தீவிரமாக கண்காணிக்கப்படும்: அமைச்சர் தகவல்

சென்னை: சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில், 10 ஆயிரம் பயனாளிகள் பயனடையும் வகையில் செயற்கை சிறுநீரக சுத்திகரிப்பு மருத்துவ உபகரணங்களை அர்ப்பணிக்கும் விழா நேற்று நடந்தது. இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, உபகரணங்களை மருத்துவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழ்நாடு முழுவதும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 15 லட்சத்து 70 ஆயிரத்து 322 சர்க்கரை நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு குரங்கம்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கிறார்கள். யாருக்காவது அந்த பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். நாளை நான் நேரடியாக விமான நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளேன். இவ்வாறு பேசினார். விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் குமரவேல், சீதாராமன், மண்டலக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

The post வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளதா என தீவிரமாக கண்காணிக்கப்படும்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Rotary Club ,Saitappettai Government Hospital ,Minister ,M. Subramanian ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள்...