×

ஹஜ் புனித யாத்திரை சென்ற நடிகை சனாகான்

சென்னை: நடிகை சனாகான் தனது கணவருடன் ஹஜ் புனித யாத்திரை சென்றுள்ள போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழில் வெளியான ‘சிலம்பாட்டம்’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘ஆயிரம் விளக்கு’, ‘தலைவன்’ உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர், சனாகான். தொடர்ந்து இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு முப்தி அனஸ் சையத் என்ற சூரத்தை சேர்ந்த மத போதகரை திருமணம் செய்துகொண்ட அவர், இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும், தனது கணவருடன் இணைந்து முழுமையான இஸ்லாமிய பெண்ணாக வாழ முடிவு செய்துள்ளதாகவும், மத பிரசாரத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தார். அதன்படி மத பிரசாரம் செய்து வரும் அவர், தற்போது கணவருடன் ஹஜ் புனித யாத்திரை சென்றுள்ளார். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வருகின்றன….

The post ஹஜ் புனித யாத்திரை சென்ற நடிகை சனாகான் appeared first on Dinakaran.

Tags : Sana Khan ,Haj ,Chennai ,Sanakhan ,Sanakan ,
× RELATED தமிழ்நாட்டில் இருந்து 5,637 பேர் ஹஜ்...