×
Saravana Stores

அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலா தொழில்முனைவோர் விருதுகள்

 

அரியலூர், ஆக. 18: அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலா தொழில்முனைவோர்கள் விருதுகள் வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு ; சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் 2021-2022 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகளை அறிவித்திருந்தார். தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது முக்கிய அறிவிப்பாகும்.

அதனடிப்படையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சம்மந்தமான தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா ஏற்பாட்டாளர், உள்ளூர்-வெளியூர் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர், பிரதான சுற்றுலா ஏற்பாட்டாளர், பயண, விமான பங்களிப்பாளர், தங்கும் விடுதி, உணவகம், வழிகாட்டி சாகசசுற்றுலா நிகழ்த்தியவர், கூட்டம் மற்றும் மாநாடு அமைப்பாளர், சமூக ஊடக தாக்கம் ஏற்படுத்தியவர், தமிழக சிறந்த விளம்பரம், சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பரகருத்து, சுற்றுலா, விருந்தோம்பல், சுற்றுலாதொடர்பான கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படுபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27 அன்று 48 விருதுகள் 17 வகைபாடுகளில் விருது வழங்கப்பட உள்ளது. அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்கள் விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இதுதொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சுற்றுலா அலுவலர் தஞ்சாவூர் அவர்களின் அலைபேசிஎண். 9176995873, உதவி சுற்றுலா அலுவலர், அரியலூர் அவர்களின் அலைபேசிஎண். 9787484754 அல்லது 7397715685 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.

 

The post அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலா தொழில்முனைவோர் விருதுகள் appeared first on Dinakaran.

Tags : Tourism Entrepreneur Awards ,Ariyalur District ,Ariyalur ,Rathnaswamy ,Tourism Minister ,
× RELATED அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீர்களுக்கு ஓய்வூதிய குறைதீர் முகாம்