- சதுரகிரி மலை
- வதிராயிபு
- சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்
- மேகமலை புலிகள் காப்பகம்
- சதுரகிரி சுந்தரமகாலிங்கம்
- சாப்டூர் காடு
- அமாவாசை
- சதுரகிரி மலை
- தின மலர்
வத்திராயிருப்பு, ஆக.18: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மற்றும் மலைப்பாதையில் இருந்த 2 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன.வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆடி அமாவாசை திருவிழாவில் ஆக.1 முதல் 5ம் தேதி வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.இதனையடுத்து, கோயில் மற்றும் வனப்பகுதியில் பக்தர்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் பொருட்களைப் அப்புறப்படுத்தும் வகையில் வனத்துறை களப் பணியாளர்கள், தாணிப்பாறை சூழல் மேம்பாட்டு குழுவினர் மற்றும் ராஜூக்கள் கல்லூரி என்.சி.சி மாணவர்கள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில் 2 டன் எடையுள்ள எளிதில் மக்காத பாலித்தீன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தாணிப்பாறை அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது பாலித்தீன் கழிவுகளை மறுசுழற்சி
செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புலிகள் காப்பக இணை இயக்குநர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
The post சதுரகிரி மலையில் 2 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.