விளாத்திகுளம், ஆக.18: விளாத்திகுளம் பகுதியில் நடந்து முடிந்த சாலை பராமரிப்பு மற்றும் புதிய சாலை அமைக்கும் பணிகளை மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். விளாத்திகுளம் தொகுதியில் பிள்ளையார்நத்தம் மந்திகுளம், பூசனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று முடிந்த சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான தற்காலிக சாலை சீரமைப்பு பணியையும், ரூ.14.45 கோடி மதிப்பிலான நிரந்தர சீரமைப்பு பணியையும் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் உதவி கோட்ட பொறியாளர் ராஜபாண்டி, இளநிலை பொறியாளர் சார்லஸ் பிரேம்குமார்,திமுக ஒன்றிய செயலாளர்கள் விளாத்திகுளம் கிழக்கு சின்னமாரிமுத்து, மேற்கு அன்புராஜன்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் இமானுவேல்,தகவல் தொழில்நுட்ப அணி விளாத்திகுளம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post விளாத்திகுளம் பகுதியில் பராமரிப்பு பணிகள் appeared first on Dinakaran.