×

உதய்பூரில் வன்முறை; கார்கள் எரிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தின் பாட்டியானி சோஹட்டா அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவனை கத்தியால் குத்தியுள்ளான். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மாணவன் காவலில் வைக்கப்பட்டுள்ளான். அவனது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் வீடு இடிக்கப்பட்டது. இந்நிலையில் சில இந்து அமைப்புக்களை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி 4 கார்களுக்கு தீ வைத்ததோடு, பல வாகனங்களை தாக்கினர். கடைகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் 24 மணி நேரத்துக்கு மொபைல் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அடுத்த உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post உதய்பூரில் வன்முறை; கார்கள் எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Udaipur ,Jaipur ,Bhattiani Chohta Government School ,Rajasthan ,
× RELATED ஜெய்பூர் பெட்ரோல் பங்க் முன் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு