- இந்தியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- ஈ. ஆர். பி.
- ராஜா
- சென்னை
- டி. ஆர். பி.
- கைத்தொழில் அமைச்சர்
- T. R. B. ராஜா
- காஞ்சிபுரம் மாவட்டம் வள்ளம்
- வடக்கால்
- டி. ஆர். பி. ராஜா
சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் பெண் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தங்கும் விடுதி குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டியளித்தார். அதில், காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் – வடகால் கிராமத்தில் ரூ.706.50 கோடி செலவில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கென பிரத்யேகமாக பிரமாண்ட தங்கும் விடுதி வளாகம் கட்டப்பட்டுள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனத்தின் 18,720 பெண் பணியாளர்கள் இதன்மூலம் பயன்பெறவுள்ளனர். மகளிர் மேம்பாட்டுக்காகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறார். பெண் பணியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஒரு தனி கிராமம் போன்று உருவாக்கப்பட்டுள்ளது. பணிக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை தமிழ்நாடு அரசு உருவாக்கி கொடுத்துள்ளது. இந்த விடுதி வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கவுள்ளார். விழாவில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு கலந்துகொள்கிறார்.
The post இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் பெண் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி appeared first on Dinakaran.