×

கல்குறிச்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்

காரியாபட்டி, ஆக.17: காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சியில் சுதந்திர தின விழா சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுகப்பிரியா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக பூங்காவனத்தம் மன கோவில் செல்லும் பாதையில் உள்ள கல்குவாரி பகுதியில் தடுப்புச்சுவர் அமைப்பது, அரசு உயர்நிலைப் பள்ளி உட்பட பல்வேறு இடங்களில் பேவர்பிளாக் சாலை அமைத்தல், கூடுதலாக சுகாதார பணியாளர்களை பணியில் சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

The post கல்குறிச்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kalkurichi ,Kariyapatti ,Kariyapatti Panchayat Union Kalkurichi Panchayat ,Special Gram Sabha ,Independence Day ,Panchayat Council ,President ,Ganesan ,Vice President ,Sugapriya ,Dinakaran ,
× RELATED குடிநீர் வழங்கக்கோரி கிராமமக்கள் மறியல்