×

முதல்வர் வேட்பாளரை முதலில் தேர்வு செய்யுங்கள்: கூட்டணி கட்சி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

மும்பை: உத்தவ் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. இந்த கூட்டணியில் இருக்கும் மூன்றுமே பெரிய கட்சிகள் என்பதனால் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மும்பையில் நடந்த கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே,‘ மகா விகாஸ் அகாடிக்கான முதல்வர் வேட்பாளரை முதலில் தேர்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் அறிவிக்கும் எந்த வேட்பாளரையும் நாங்கள் ஆதரிக்க தயாராக இருக்கிறோம். மகா விகாஸ் அகாடி கூட்டணியினரும் தங்களது சுயநலத்தை விட்டுவிட்டு பொதுநலன் காக்க போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post முதல்வர் வேட்பாளரை முதலில் தேர்வு செய்யுங்கள்: கூட்டணி கட்சி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Uddhav Thackeray ,MUMBAI ,Maha Vikas Akadi ,Uddhav Shiv Sena ,Congress ,Nationalist Congress ,Dinakaran ,
× RELATED அம்பேத்கர் பெயரை அழிக்க பாஜ முயற்சிக்கிறது: உத்தவ் தாக்கரே சாடல்