×
Saravana Stores

பலத்த மழையால் 120 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: செய்யாறு அருகே விவசாயிகள் வேதனை

செய்யாறு: செய்யாறு தாலுகா அனக்காவூர் ஒன்றியம் ஆக்கூர் கிராமத்தில் பெரிய ஏரியின் கீழ் சுமார் 150 ஏக்கரில் நெற்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கியது. பின்னர் நெல்மணிகள் முளைத்தது. இப்பகுதிகளில் மட்டும் சுமார் 120 ஏக்கர் பயிர்கள் முழுவதும் சேதமானதாக தெரிகிறது. பெரும்பாலான பயிர்கள் சேதமான நிலையில், ஒரு சில நிலங்களில் உள்ள பயிர்கள், சேறும் சகதியுமாக இருப்பதால் அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஏக்கருக்கு சுமார் ₹40 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில், குறைந்தளவு மகசூல் கூட கிடைக்காத நிலையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வருவாய், வேளாண்துறை முறையாக கணக்கீடு செய்யவேண்டும். உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மனிதர்களுக்கு மருத்துவ காப்பீடு உடனடியாக உதவி செய்வதுபோல், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் ஈடுகட்டும் வகையில் உடனடியாக காப்பீடு வழங்கும் வகையில் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பலத்த மழையால் 120 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: செய்யாறு அருகே விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Taluga ,Anakavur Union ,Aakur ,
× RELATED கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கொன்று...