×
Saravana Stores

செட்டிநாட்டு அவியல்

தேவையானவை:

கத்திரிக்காய் – 100 கிராம்,
உருளைக்கிழங்கு – 2,
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று,
பட்டை – சிறிய துண்டு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க:

தேங்காய் துருவல் – கால் கப்,
பச்சை மிளகாய் – 5,
பூண்டு – 3 பல்,
சோம்பு – ஒரு டீஸ்பூன்,
பொட்டுக் கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ள வற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து வேக விடவும். காய்கள் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்… ருசியான செட்டிநாட்டு அவியல் ரெடி! இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற அவியல் இது.

The post செட்டிநாட்டு அவியல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கோதுமை ரோல் சிப்ஸ்