×
Saravana Stores

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பில்லை: பொது சுகாதாரத்துறை தகவல்


சென்னை: தமிழ்நாட்டில் குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு இல்லை என பொதுசுகாதாரத்துறை அறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் குரங்கம்மை வேகமாக பரவிய நிலையில், ஸ்வீடன் நாட்டிலும் இந்த நோயின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பரவலை உலக சுகாதார நிறுவனம், அவசர நிலையை அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களின் சுகாதார அதிகாரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்து அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
* காங்கோ, மத்திய ஆப்ரிக்காவில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்தில் சோதனை செய்ய வேண்டும்
* நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளில் இருந்து வருவோரை சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
* தோல் அரிப்பு, 2 முதல் 4 வாரம் காய்ச்சல், தலை, தசை, முதுகு வலி, சோர்வு ஆகியவை அறிகுறிகள்.
* குரங்கு அம்மை நோய் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளிடம் இருந்தும் பரவக்கூடியது.

* தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கும் நபரை உடனடி சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.
* பாதிக்கப்பட்டோருடன் நேரடி தொடர்பை தவிர்த்தல், தடுப்பூசி மூலமாக தற்காத்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பில்லை: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Department of Public Health Information ,Chennai ,Public Health Department ,Tamil Nadu ,African ,Sweden ,
× RELATED காவல்துறையில் பணிக்கு...