×

‘பொன்னியின் செல்வன் 2’ல் கமல்ஹாசன்

 

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படம், வரும் 28ம் தேதி வெளியாகிறது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஜெயராம், விக்ரம் பிரபு, ஆடு களம் கிஷோர், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகும் இப்படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் சென்றுள்ளனர்.

இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் அறிமுக காட்சிக்கு கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளது தொடர்பான வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. கடந்த ஆண்டு திரைக்கு வந்த ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்துக்கும் கமல்ஹாசன்தான் பின்னணி குரல் கொடுத்திருந்தார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கும் கமல்ஹாசன், அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார். ‘நாயகன்’ படம் வெளியாகி 36 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் இணைவதால், அதிகமான எதிர் பார்ப்பு ஏற்பட் டுள்ளது.

The post ‘பொன்னியின் செல்வன் 2’ல் கமல்ஹாசன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamal Haasan ,Chennai ,Mani Ratnam ,Vikram ,Karthi ,Jayam Ravi ,Sarathkumar ,Parthiban ,Prakashraj ,Jayaram ,Vikram Prabhu ,Aadu Kalam Kishore ,Aishwarya Rai ,Trisha ,Aishwarya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நவீன இந்தியாவை நிர்மாணித்த தனித்த...