×

ஆட்டோவுக்கு தீ வைத்த வாலிபர் கைது

உடன்குடி, ஆக. 15: உடன்குடி அருகேயுள்ள தேரியூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது உறவினர் பெண்ணுக்கும், மெய்யூர் கலியன்விளையை சேர்ந்த சின்னதம்பி மகன் சீதாராமன்(35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக சீதாராமனுக்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஏற்பட்டது. கடந்த மாதம் 22ம் தேதி நள்ளிரவு முத்துக்குமாரின் ஆட்டோ தீவைத்து எரிக்கப்பட்டது. சீதாராமன் கடந்த 3ம் தேதி இரவு முத்துக்குமாரின் மனைவி உமாமகேஸ்வரிக்கு போன் செய்து எனக்கு விவாகரத்து ஏற்பட காரணம் நீங்கள் தான் எனக்கூறி ஆட்டோவை எரித்தது போல் உன்னையும், உன் குடும்பத்தையும் எரிப்பேன் என்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் சீதாராமனை கைது செய்தனர்.

The post ஆட்டோவுக்கு தீ வைத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Udengudi ,Muthukumar ,Teriyur North Street ,Ebenkudi ,Sitharaman ,Meiyur ,Kalianvilai ,Seetharaman ,
× RELATED தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது