×
Saravana Stores

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு ரூ.80.70 கோடி செலவில் கட்டப்பட்ட விடுதி, பள்ளி, சமுதாயக் கூடங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் 32 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 விடுதிக் கட்டிடங்கள், 15 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான 14 பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் 32 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 28 சமுதாயக் கூடங்களை திறந்து வைத்தார்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிக் கட்டிடங்கள்: இதன் அடிப்படையில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டம் – தேவகோட்டை ஆகிய இடங்களில் 6 கோடியே 71 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவர்களுக்கான 2 விடுதிக் கட்டடங்கள்; தூத்துக்குடி மாவட்டம் – ஒட்டப்பிடாரம், ஆறுமுகனேரி, குலசேகரப்பட்டினம், நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய இடங்களில் 11 கோடியே 32 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர்களுக்கான 5 விடுதிக் கட்டடங்கள்; கள்ளக்குறிச்சி மாவட்டம் – மூலக்காடு, மேல்வாழப்பாடி, கிளாக்காடு, மணியார்பாளையம் மற்றும் அரசம்பட்டு ஆகிய இடங்களில் 8 கோடியே 95 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் நலப் பள்ளி மாணவ, மாணவியருக்கான 5 விடுதிக் கட்டடங்கள்; வேலூர், விருதுநகர், பெரம்பலூர் மாவட்டம் – வேப்பந்தட்டை, சென்னை மாவட்டம் – வேப்பேரி ஆகிய இடங்களில் 6 கோடியே 28 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 4 விடுதிக் கட்டடங்கள் என மொத்தம் 32 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 16 விடுதிக் கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிக் கட்டிடங்கள்: திருவள்ளூர் மாவட்டம் – பெரும்பேடுகுப்பம், செங்கல்பட்டு மாவட்டம் – புலிக்குன்றம், மதுரை மாவட்டம் – செம்பியனேந்தல், தேனி மாவட்டம் – டி.பொம்மிநாயக்கன்பட்டி, பி. துரைராஜப்புரம், அம்மாச்சியாபுரம், சேலம் மாவட்டம் – மாட்டுக்காரனூர், சிக்கனம்பட்டி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – பழையபாளையம், கள்ளக்குறிச்சி மாவட்டம் – சிறுவங்கூர் ஆகிய இடங்களில் 15 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 14 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கான வகுப்பறை கட்டிடங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

ஆதிதிராவிடர் நல சமுதாய கூடங்கள்: திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாமக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 32 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 28 ஆதிதிராவிடர் நல சமுதாய கூடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு ரூ.80.70 கோடி செலவில் கட்டப்பட்ட விடுதி, பள்ளி, சமுதாயக் கூடங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Adi Dravidian ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu ,M.K. Stalin ,Chief Secretariat ,Adi Dravidar Housing Corporation ,Adi Dravidar and Tribal Welfare Department ,
× RELATED தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும்...